Sunday, December 15, 2013

மண்டேலாவின் புரட்சிப் பயணம்

-->
தொடரட்டும் மடிபாவின் பயணம்!
ஆலிவர் ஷெர்மான்
(ஜமைக்கா கவிஞர்)
றைவா,
இந்த சேதியைக் கொண்டுபோ
பக்குவமாய் சேர்த்துவிடு
பழுத்த அந்த சிங்கத்திடம்!
ஓ, அதன் கண்களில்
இன்னும் எத்தனை பிரகாசம்,
எத்துணை ஜீவன்!
வியந்துபோகிறேன் அதுகண்டு;
வீணே கழித்துவிட்டேனோ என் காலம்?
என் வயதில் அவரோ
எழுதி முடித்துவிட்டார்
தன் தேசத்து
மகத்தான எதிர்காலத்தின்
மறுபக்கம்!
காரக்கிருகத்தில்
கட்டுண்டு கிடந்தார் பல்லாண்டு
காட்டு விலங்கும்
கலங்கித்தான் போயிருக்கும்
கடுஞ்சினத்தில்;
ஆனால்,
மருளவில்லை மண்டேலா...
வாராது வந்த மாமணி...
மடிபா எனும் வீரச்சிங்கம்!
புகழ்மிகு தந்தையே,
துவண்டு கிடக்கும் பிடரி சிலிர்த்து
துள்ளி எழுவீர் மீண்டும்!
தொடருட்டும் உம் பயணம்
சவன்னா கானகத்தில்!!
காற்றில் மிதந்துவரும்-உங்கள்
கர்ஜனையின் அலைகள்
கலக்கட்டும் பூமித்தாயின் உள்ளத்தை
கதறித் தன்னுள் அவள் அழைக்கும்போதும்
தளர்த்தவேண்டாம் பீடுநடைதனை!
நீரல்லவோ எமைத் தலைநிமிரச் செய்தீர்
மெய்யாகவே நானும்கூட-அந்தப்
பெருமையின் ஒரு துளிதான்!
கறுப்பு-வெளுப்பு பேதம்
கடுகளவும் பாராத மனிதக்கூட்டம்
நாங்கள் காண்பதெல்லாம்
சிவப்பும், பொன்னிறமும்,
பச்சை வண்ணமும்தான்!
எங்கள் இதயமெல்லாம்-அந்த
அரிமாவிடம் அடைக்கலம்
அதனால்தான் வேண்டுகிறேன்:
இறைவா,
இந்த சேதியை தயைகூர்ந்து
ஏந்திச் செல்க!
இயலாதென்றால்
ஒன்பது பிறவிகொண்டு சோம்பித்திரியும்
அந்த பொய்ப்பூனைகளின்
ஆயுளைப் பறித்துவிடு;
ஏற்கட்டும் அதனை
எம் கருணைச் சிங்கம்!
எங்கள் மடிபா, வீரத்திருமகனே,
காவியத்துக் கதைபோல்
வழிமீது வழிவைத்து
காத்திருப்போம் உமக்காக!
உங்கள் பயணம்
இன்னும் முடியவில்லையன்றோ?
தமிழில்: விதுரன்



0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP